வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்ட பகுதியில் கடமையாற்றும் கிராம அலுவலர் ஒருவர் தான் கடமையாற்றும் கிராமத்தில் போட்டியிடும் தனது உறவினருக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ADVERTISEMENT
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமம் ஒன்றில் கடமையாற்றும் பெண் கிராம அலுவலர் ஒருவர், அவர் கடமையாற்றும் கிராமத்தில் இருந்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் போட்டியிடும் தனது உறவினருக்கு வாக்களிக்குமாறு கிராம அலுவலரது அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு அறிவுறுத்துவதாக பொது மககள் குற்றம் சாட்டியுள்ளனர்.