திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக திருமதி புனிதவதி துஷ்யந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் 2025/2026 ஆம் ஆண்டுக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் காரை நகரை பிறப்பிடமாகக் கொண்ட இவர், பொன்னம்பலம் – ராணி தேவி தம்பதியின் கனிஷ்ட புதல்வியாவார்.
யாழ் வேம்படி மகளிர் கல்லுாரியிலும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லுாரியிலும் கல்வி பயின்ற இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2005 ம் ஆண்டு சட்டமாணி பட்டத்தைப் பெற்று 2006 ம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத் தரணியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
