2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டமானது இன்று (26) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்
டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலகம் உட்பட பிரதேச செயலகங்களின் கணக்காய்வு முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் தலைமை அதிபதி (கிழக்கு மாகாணம்) எம்.எச்.எம். அரபாத் , கணக்காய்வு அத்தியட்சகர் என்.ஜி.என். ரத்னஸ்ரீ, பிரதம உள்ளக கணக்காய்வாளர் பா. கேதீஸ்வரன், பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாவட்ட பொறியியலாளர் ஏ.கே.எம்.நபீல், முகாமைத்துவ கணக்காய்வு திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ( நிகழ்நிலை), அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உள்ளக கணக்காய்வாளர் (நிகழ்நிலை) , மாவட்ட கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


