கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K-8 போர் விமானம் வாரியபொல பகுதியில் விபத்துக்குள்ளானதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் திரு.பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக கொண்டு வந்ததாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே நேற்று (25) தெரிவித்தார்.
விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக விமானப்படைத் தளபதியினால் நியமிக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவின் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே விபத்துக்கான காரணத்தை இன்னும் கூற முடியாது என்றார்.