கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவை யுத்தத்திற்கு பின்பு முதற்தடவையாக இன்று 15.03.2025 பரிசளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்து இளைஞர் பேரவையின் தலைவர் இராசதுரை ஜெயசுதர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக திரு.சிவஞானம் சிறிதரன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிளி, யாழ்ப்பாண மாவட்டம், திரு.தவச்செல்வன்.முகுந்தன் செயலாளர் கரைச்சி பிரதேச செயலகம், திரு.சந்திர மெனலீசன் லலீசன் செந்தமிழ் சொல்லருவி முதல்வர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் பாடசாலைகளின் முதல்வர்கள், ஆலய நிர்வாகத்தினர், பொது அமைப்புக்கள் சார்ந்தோர், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சைவசமய அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.






