• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பட்டலந்த வதை முகாம் விவகாரம் போல் தமிழினப் படு கொ லைக்கு எதிராக அநுர அரசின் நடவடிக்கை என்ன?

Mathavi by Mathavi
March 13, 2025
in இலங்கை செய்திகள்.
0
பட்டலந்த வதை முகாம் விவகாரம் போல் தமிழினப் படு கொ லைக்கு எதிராக அநுர அரசின் நடவடிக்கை என்ன?
Share on FacebookShare on Twitter

“பட்டலந்த விவகாரம் போன்று எத்தனை ஆயிரமாயிரம் சம்பவங்கள் எமது தமிழ் மண்ணிலே நடந்திருக்கின்றன. இந்தச் சம்பவங்கள் உங்களுக்குத் தெரியவில்லையா? இதற்கு என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகின்றீர்கள்?” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இப்போது பலரும் பேசி வருகின்ற பட்டலந்த விவகாரம் அந்தக் காலத்திலேயே மிகப் பெரியளவில் பேசப்பட்டது. அதாவது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இளமைக் காலத்திலே அதற்கும் அவருக்கும் தொடர்பு இருந்த்தாகவே பேசப்பட்டு வந்தது.

அந்த ஆணைக்குழு அறிக்கை கூட இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாகவும் இதனை உறுதிப்படுத்தியும் இருக்கின்றது.

ஆனபடியால் அவர்களைப் பொறுத்தவரையில் இது காலங்கடந்தது என்றாலும் அதனைப் பகிரங்கப்படுத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்து அரசு அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது சரி என்றே நான் நினைக்கின்றேன்.

உண்மையைச் சொல்லப் போனால் இந்தப் பட்டலந்த படு கொ லை விவகாரம் என்பது அந்த நாட்டிலே இருக்கின்ற அந்த மக்களுக்காக அங்க செய்கின்ற விடயம்.

ஆனால், தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் அது சரி என்று நியாயப்படுத்துகின்ற வேலையைத்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசுகள் செய்து கொண்டு வந்திருக்கின்றன.

அதுதான் இவர்களது பொலிசியாகவும் அதாவது அவர்களது நிலைப்பாடாகவும் இருக்கின்றது. ஏனெனில் காட்சிகள் மாறுகின்றதே ஒழிய ஆட்கள் மாறவில்லலை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படாது.

இந்தப் பட்டலந்த விவகாரம் சம்பந்தமாக ஆட்சியாளர்களிடம் நாங்கள் ஏதும் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அது அவர்களே சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்படித்தான் இப்போது நடக்கின்றது. இதனைப் பற்றி சிங்கள அரசியல்வாதிகள் பேசிக்கொள்ளட்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவரும் சேர்ந்து இவரும் சேர்ந்து என அவர்கள் எல்லோருமாக இப்படி எத்தனை பட்டலந்தவை எமது மண்ணிலே நடத்தியிருக்கின்றார்கள்.

ஒரு பட்டலந்த பற்றி இப்போது அங்கு அவர்கள் பேசுகின்றார்கள். ஆனால், இப்படி எத்தனை ஆயிரம் பட்டலந்த கொடுமைகள் இங்கு நடந்திருக்கின்றன.

இங்கு எவ்வளவு பேர் கொடுமைப்படுத்தப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள். அவை எல்லாவற்றுக்கும் விசாரணை நடத்தப்படுமா என்றால் இல்லை.

ஆக பட்டலந்த போல் பற்பல சம்பவங்கள் எங்களுக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ளமைக்கு நீங்கள் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகின்றீர்கள் என்றும், உங்களால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் பல்வேறு கேள்விகளை நாங்கள் எழுப்பலாம். அதைச் செய்வோம்.” – என்றார்.

Related Posts

அம்பகமுவ பிரதேச சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.!

அம்பகமுவ பிரதேச சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.!

by Mathavi
June 17, 2026
0

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்ந தலைமையில் இன்று 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு கினிகத்தேன நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்...

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஒற்றையாட்சி அரசமைப்பை நிறைவேற்ற தமிழரசு தீவிரம்.!

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஒற்றையாட்சி அரசமைப்பை நிறைவேற்ற தமிழரசு தீவிரம்.!

by Mathavi
June 17, 2026
0

புதிய அரசமைப்பு என்ற பெயரில் 'ஏக்கிய ராஜ்ஜிய' (ஒற்றையாட்சி) அரசமைப்பைத் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நிறைவேற்றுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றது என்றும்,...

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “சிறு குற்றங்கள்” எனும் விழிப்புணர்வு கருத்தரங்கு.!

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “சிறு குற்றங்கள்” எனும் விழிப்புணர்வு கருத்தரங்கு.!

by Mathavi
June 17, 2026
0

அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் அமைந்துள்ள சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களுக்காக "சிறு குற்றங்கள்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

19 துப்பாக்கிகள் மீட்பு; பிரதான சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
June 17, 2026
0

தெமட்டகொடை பகுதியில் கடந்த ஜூன் 3ஆம் திகதி 19 துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ஆணும் பெண்ணும் கதிர்காமம் பகுதியிலுள்ள...

டிக்கோயா நகரக் கழிவுகள் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கொட்டப்படுவதால் மக்கள் பாதிப்பு.!

டிக்கோயா நகரக் கழிவுகள் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கொட்டப்படுவதால் மக்கள் பாதிப்பு.!

by Mathavi
June 17, 2026
0

ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் சுகாதாரப் பணியாளர்களினால் சேகரிக்கப்படும் நகரக் கழிவுகள், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் டிக்கோயா ஓடையில் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள்...

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை; இருவர் கைது.!

by Mathavi
June 17, 2026
0

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து...

கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 17, 2026
0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் 16.06.2026 நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலியாகியுள்ளார். தனது பணியினை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியை நோக்கி...

அரசு வீட்டு வேலை பணியாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.!

அரசு வீட்டு வேலை பணியாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.!

by Mathavi
June 17, 2026
0

அரசாங்கம் தேர்தல் காலத்தில் வீட்டு வேலை பணியாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என வீட்டு வேலை பணியாளர்களின் உரிமைகளுக்காக செயல்படும் ப்ரோட்டெக்ட் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது....

எரிபொருள் விலை குறைப்பு உறுதி.!

எரிபொருள் விலை குறைப்பு உறுதி.!

by Mathavi
June 17, 2026
0

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், உள்நாட்டிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே...

புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு நடவடிக்கை.!

புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு நடவடிக்கை.!

by Mathavi
June 17, 2026
0

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை(17) அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி