• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மக்களின் காணிகளை அரசதிணைக்களங்கள் திருடுவதாக ரவிகரன் எம்.பி சபையில் குற்றச்சாட்டு.

Bharathy by Bharathy
March 12, 2025
in இலங்கை செய்திகள், முல்லைதீவு செய்திகள்
1 0
0
சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்க!
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதிகளில், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மக்களின் விவசாய மற்றும், குடியிருப்புக் காணிகளை அத்துமீறி திருடியுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

அதேவேளை இவ்வாறு மக்களின் காணித்திருட்டில் ஈடுபடும் திணைக்களங்ளில் ஒன்றான வனவளத் திணைக்களம் வன்னியில் இடம்பெறும் சட்டவிரோத காடழிப்புச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி, வனவளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தெரிவித்தார். கடந்த 2009ஆம் இற்கு முன்பு மரக்குற்றிகளால் நிரப்பப்பட்ட கனகரக வாகனங்களைக் கண்டதில்லைஎனவும், மரம் அரிகின்ற இயந்திர வாள்களின் கொடூர ஓசையைக் கேட்டதில்லை எனவும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வனவளத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் பாதுகாத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றில் இன்று ( 2025.03.12) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, கௌரவ காணிவிடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர், பிரதிஅமைச்சர் அவர்களே, மக்களினதும், எனது கருத்துக்களையும் குறிப்பிடுகின்றேன்.

முன்னைய ஆட்சியில் திணைக்களங்களால் காணித்திருட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தங்களுடைய ஆட்சியில் இவ்வாறான காணித் திருட்டுக்கள் நீக்கப்படவேண்டும்.

வன்னிப்பெருநிலப்பரப்பு எப்போதும் காடுகளை அதிகமாகக்கொண்ட நிலப்புரப்பாகவே காணப்படுகின்றது. இங்குள்ள மக்களின் வாழ்வு தொன்று தொட்டு இயற்கையோடு இணைந்ததொன்றாகவே காணப்படுகின்றது. இங்குள்ள மக்கள் என்றும் இயற்கையோடு முரண்பட்டு கொண்டதில்லை. காடுகளை அழித்ததில்லை. 2009ம் ஆண்டுவரை வெட்டப்பட்ட மரக்குற்றிகளால் நிரப்பப்பட்ட கனகரக வாகனங்கள் எம் வீதியால் சென்றதை நாம் கண்டதில்லை.

மரம் அரிகின்ற இயந்திர வாள்களின் கொடூர ஓசையை நாம் கேட்டதில்லை. 2009ம் ஆண்டு வரை வனவளத்திணைக்களமும், வனஜீவராசிகள் திணைக்களமும், இங்கு எமது இடத்தில் இருக்கவில்லை. ஆனாலும் விடுதலைப்புலிகளின் வனவளப்பிரிவு இருந்தது. இயற்கையை நேசித்த வன்னியர்களின் வாழ்க்கைமுறை இருந்தது. இதனால் வனப்பகுதிகள் அழிக்கப்படவில்லை. காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் வெட்டு மரங்களாகவும், விறகுத்தேவைகளுக்காகவும் பெருநகரங்களை நோக்கி ஏற்றிச்செல்லப்படவில்லை. காடுகள் மிகவும் கவனமாக காவல் செய்யப்பட்டன.

கடந்த 2010ஆம் ஆண்டிலும் அதன்பின்னரும்தான் வனவளத்திணைக்களத்தினதும், வனஜீவராசிகள் திணைக்களத்தினதும், நிர்வாகம் இங்கு நிலைநிறுத்தப்பட்டது.

கௌவ சபாநாயகர் அவர்களே இதன் பின்னர்தான் வன்னிப்பெருநிலப் பரப்பின் காடுகள் குறையாடப்பட்டன.

மன்னாரில் முசலி உட்பட குறிப்பிட்ட சில இடங்களிலும், வவுனியாவில் பம்பைமடு உள்ளிட்ட சிலகுறிப்பிட்ட இடங்களிலும் அடர்காடுகள், ஒதுக்கப்பட்ட வனப்பகுதிகள் ஈவுஇரக்கமற்று கனகரக இயந்திரங்களால் மூர்க்கத்தனமாக சிதைக்கப்பட்டன. இவைகள் வனவளத்திணைக்களத்தின் அபகரிப்புக்கள் அல்லது, திருட்டுக்களாகவே கருதப்படவேண்டும்.

google earth time Line ஊடாகப் பாருங்கள் 2009ன்முன்பு வன்னிப்பெருநிலப் பரப்பில் வனவளம் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதையும், 2009ன்பின்பு வனப்பகுதிகள் எவ்வாறு சூறையாடப்பட்டது என்பதையும் அறியமுடியும்.

இன்றுவரை வனவளத்திணைக்களத்தின் செயல்பாடுகள் மிகவும் ஊழல் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதேபோலத்தான் வனஜீவராசிகள் திணைக்களமும் இங்கு செயற்பட்டுவருகின்றது. இவ்வாறு வனப்பகுதிகள், இயற்கை வாழ்விடங்கள் என்பவை சூறையாடப்படுவதற்கு காரணமாக இருக்கும் இத்திருட்டுத் திணைக்களங்கள் 2010ன் பின் எங்கள் வீட்டுமுற்றங்களையும் வயல் நிலங்களையும், தோட்டந் துரவுகளையும், ஏன்… வீதிகளையும் இடுகாடுகள், சுடுகாடுகளையும்கூட திருடத்தொடங்கி விட்டார்கள்.

கௌரவ சபாநாயகர் அவர்களே
2009ஆம் ஆண்டின் பின்னர் தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களையும், விதிகளையும் புறக்கணித்து மாவட்டச்செயலாளருக்கோ, பிரதேசச் செயலாளருக்கோ தெரியப்படுத்தாது, நிலஅளவைத் திணைக்களத்தின் ஊடாக வரைபடங்களையும் பெற்றுக்கொள்ளாமல், முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 167,487 ஏக்கர் நிலப்பரப்பு வனவளத்திணைக்களத்தால் வனப்பிரதேசமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வறிக்கையின்படி 1983ஆம் ஆண்டுதொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை உள்நாட்டுப்போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் குடியிருப்புக்காணிகள், முத்தையன் கட்டுக்குள நீர்ப்பாசனத்திட்டம், தண்ணிமுறிப்புக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின்கீழ் மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட வயல்நிலங்கள், இன்னும் கமநல அபிவிருத்தித் திணைக் களத்தின் நிர்வாகத்தின்கீழ் இருக்கும் நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும், அவற்றின்கீழ் இருக்கும் வயல்நிலங்கள் என்பன வனவளத்திணைக்களத்தால் விதிமுறைகளை மீறிய வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் ஒதுக்கப்பட்ட வனவளப்பிரதேசங்களாக வர்த்தமானப்படுத்தப்பட்டு இருக்கின்றன. என மாவட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதே போல் 2009ஆம் ஆண்டின் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவில் 10,119 ஏக்கர் நிலப்பரப்பு நந்திக்கடல் இயற்கை வாழ்விடமாகவும், 10,925 ஏக்கர் நிலப்பரப்பு நாயாறு இயற்கை வாழ்விடமாகவும், சுண்டிக்குளம் தேசிய பூங்கா என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பரிவிலும், சேர்த்து 48,357 ஏக்கர் பிரதேசத்தையுமாக மொத்தம் 69,401ஏக்கர் பிரதேசத்தை வனஜீவராசிகள் திணைக்களம் தங்களுடைய ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன – என்றார்.

Thinakaran
408 720.9K
  • Videos
  • Playlists
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர்
    தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர் 1 day ago
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 4 days ago
  • 395 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; 477 பேர் கைது.!

      புதையல் தோண்டிய ஏழு பேர் கைது.!

      by Mathavi
      May 28, 2025
      0

      அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் 01 ஆம் பிரதேசத்தில் நேற்று(27) சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு...

      திருகோணமலை மாநகர மேயராக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கந்தசாமி செல்வராசா தெரிவு.!

      திருகோணமலை மாநகர மேயராக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கந்தசாமி செல்வராசா தெரிவு.!

      by Mathavi
      May 28, 2025
      0

      திருகோணமலை மாநகர சபை மேயராக இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய கந்தசாமி செல்வராசா பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல்...

      வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு.!

      வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு.!

      by Mathavi
      May 28, 2025
      0

      70 வயதுக்கு மேற்பட்ட அஸ்வெசும பயனாளி குடும்பங்களில் வசிக்கும் வயோதிபர்களுக்கான மே மாத உதவித் தொகை வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த...

      இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தை.!

      இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தை.!

      by Mathavi
      May 28, 2025
      0

      திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மாபெரும் தொழிற் சந்தை ஒன்று இன்று (28) இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க இடம்...

      கண்டியில் 36 மணிநேர நீர்வெட்டு.!

      கண்டியில் 36 மணிநேர நீர்வெட்டு.!

      by Mathavi
      May 28, 2025
      0

      கண்டியில் சில பகுதிகளில் இன்று (28) நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று என்று கண்டி மாநகர சபையின் மாநகர ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. கண்டி பல்வகை போக்குவரத்து...

      கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க இடமளியோம்.!

      கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க இடமளியோம்.!

      by Mathavi
      May 28, 2025
      0

      "கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மைப் பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை. எனவே, அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது. ஏனெனில் அது...

      இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணி விடுவிப்புக்கு எதிராக தெற்கில் சிலர் இப்போதும் போர்க்கொடி.!

      இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணி விடுவிப்புக்கு எதிராக தெற்கில் சிலர் இப்போதும் போர்க்கொடி.!

      by Mathavi
      May 28, 2025
      0

      "அரசால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுகின்றது."...

      போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!

      போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!

      by Mathavi
      May 28, 2025
      0

      வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தை தவிர்ந்த விவசாய திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த ஒப்பந்த அடிப்படையில் பல வருட காலம் பணிபுரியும் ஊழியர்கள்...

      மன்னார் – வங்காலையில் கடலரிப்பு; நிலைமைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

      மன்னார் – வங்காலையில் கடலரிப்பு; நிலைமைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

      by Mathavi
      May 28, 2025
      0

      மன்னார் - நானாட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலைமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (27)...

      Load More
      Next Post
      விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

      விபத்தில் 73 வயது முதியவர்  உயிரிழப்பு...!

      தே.ம.சக்தியின் உயர்பீட உறுப்பினருமான கலாநிதியின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு!

      தே.ம.சக்தியின் உயர்பீட உறுப்பினருமான கலாநிதியின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு!

      வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!

      வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி