சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயம் அண்மையில் உத்தியோகபூர்வமகாக சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைப்பின் இலங்கைக்கான பொது பணிப்பாளர் துவான் ரிஸ்வான் காசிம் கலந்து கொண்டதுடன் காரியாலயத்தை உத்தியோகபூர்வமகாக திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி சம்சுதீன் மற்றும் விசேட அதிதிகளாக இவ்வமைப்பின் இலங்கைகான பொதுச் செயலாளர் மனோஜ் சஞ்சீவ கொழும்பு மாவட்ட பணிப்பாளர் கோசலா கஜாநாயக, கண்டி மாவட்ட இளம் பணிப்பாளர் மஹ்மூத் மற்றும் சாய்ந்தமருது 06 ஆம் பிரிவு கிராம சேவகர் திருமதி ஸஹ்னாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு அம்பாறை மாவட்ட அங்கத்தவர்களுக்கான சுங்கத்துவ அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையதின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்வர், செயலாளர் நிஷார், கணக்கு பரிசோதகர் ஹிம்தாட், பொருளாளர் ரஷீட், உதவி செயலாளர் முஜீப் மற்றும் உறுப்பினர்களுக்கும் அம்பறை மாவட்ட பணிப்பாளர் திருமதி ஏ.ஜே.எப். பைரூஷா நன்றிகளை தெரிவித்தார்.









