திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (01) பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தில் பயணித்த 33 பேரில் 18 பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினுவங்கொடவிலிருந்து சேருவில பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது மூதுார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



