வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் தாதியர் சேவைக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளமை மற்றும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தாதியர்களினால் வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஒரு மணி நேர பணிபகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அரசே தாதியர்களிற்கு பட்ஜெட்டில் சரியான நீதியை பெற்றுக்கொடு, 24 மணிநேரம் 365 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு குறைத்தது ஏன் போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.





