வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய மகா சிவராத்திரி பூஜைகள் ஆலய பிரதம குருக்கள் யேசுத குருக்கள் தலைமையில் பூஜைகள் இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
இதன் போது எந்த வித அசம்பாசங்களும் இன்றி வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது. வழிபாட்டுக்கு தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு வவுனியா வடக்கு அமைப்பாளர்கள் இன்டிகே யோ. சிவரூபன் ஆகியோரும் நெடுங்கேணி வனவளத்துறை உத்தியோகத்தர்கள், நெடுங்கேணி பொலிஸ், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.








