உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக பாரவூர்தி ஒன்றில் ஏற்றி வரப்பட்ட 18 மாடுகளை (24/02/2025) திங்கட்கிழமை இரவு சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை ஏற்றி வந்த பாரவூர்தியை சாவகச்சேரி நகரில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போதே மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




