கிளிநொச்சி மாவட்ட தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது தருமபுரம் மத்திய கல்லூரி மாணவர்களின் பேண்ட் வாத்திய அணி வகுப்பு மரியாதையுடன் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அதிகாரி சிசிர பெத்த தந்ரி அவர்களினால் நடத்தப்பட்டது.
தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி டி எம் சதுரங்க அவர்களின் பொறுப்பின் கீழ் உள்ள அணி வகுப்பு மரியாதை பொலிஸ் நிலைய வாகனங்கள் மற்றும் சீருடைகள் அவர்களின் இருக்கை, அறைகள் என்பன பொலிஸ் பரிசோதனை மூலம் பார்வையிடப்பட்டது.




