பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை கல்வள பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(23) மாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பண்டாரவளை பூனாகல வீதி கல்வளப் பகுதியில் புதிய வீடு நிர்மாணிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது 31 வயதான ஓரு பிள்ளையின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மண் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாரிய மண்மேடு சரிந்து விழுந்து குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக சக ஊழியர்கள் தெரிவித்தனர்.
சக ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு மேல் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்த பண்டாரவளை பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட உள்ளதாக பண்டாரவளை பொலிசார் தெரிவித்தனர்.