இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் புறநகர்ப் பகுதிகளான பேட் யாம் மற்றும் ஹோலோனில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் மூன்று பேருந்துகள் வியாழக்கிழமை (20) இரவு அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இருப்பினும், குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் பேருந்துகள் காலியாக நிறுத்தப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
மேலும், இரண்டு பேருந்துகளிலிருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்புகள் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இஸ்ரேலிய காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் அனைத்து முக்கிய இஸ்ரேலிய நகரங்களிலும் பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
பேருந்து குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அவசர பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதுடன், பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
