கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



