இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் புனித பயணமாக மக்காவுக்குச் சென்றுள்ளார்.
சவூதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு ஒவ்வொரு இஸ்லாமியரும் செல்ல வேண்டும் என்பது அந்த மார்க்கம் வலியுறுத்தும் கடமைகளில் ஒன்றாகும்.
அந்தவகையில் நேற்று (17) இரவு முகமது சிராஜ் சம்சாபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி தேசிய விமான நிலையத்திலிருந்து மக்காவுக்குப் புறப்பட்டதாக வீடியோ வெளியாகியுள்ளது.
இதேவேளை தனது இன்ஸ்டா பக்கத்தில் இதை உறுதிசெய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சிராஜ். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐ.பி.எல் 2025க்கு முன்பாக ரமழான் வரவிருப்பதால் இந்தப் புனித பயணத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.