வடமாகாண பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் நடைபெற்றது.
வடமாகாணத்தைச் சேர்ந்த 47 பாடசாலைகளுக்கு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்டது.




