ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
அதன்படி, ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன் பெற்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சுழலில் அசத்திய ஜோமல் வாரிக்கன் 19 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, ஜனவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனி பெற்றார்.