வவுனியா தெற்கு வலய ஆசிரியர்களின் உள்ளக இடமாற்றம் தொடர்பில் இடமாற்ற சபையைக் கூட்டாது வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் இழுத்தடிகின்றார் என்று ஆசிரியர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பித்து தற்போது முதலாம் தவணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வடக்கின் அனைத்து கல்வி வலயங்களிலும் உள்ளக இடமாற்ற சபைக் கூட்டமானது நிறைவடைந்து ஆசிரியர் இடமாற்ற விவரம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், வவுனியா தெற்கு வலயத்தில் ஆசிரியர் இடமாற்ற சபைக் கூட்டமானது புதிய வலயக் கல்விப் பணிப்பாளரால் கூட்டப்படாது இழுத்தடிக்கபட்டு வருகின்றது. இதன் காரணமாக இடமாற்றம் பெற வேண்டிய ஆசிரியர்கள் பலரும் தொடர்ந்தும் தூர இடங்களிலும், கஷ்டப் பிரதேசங்களிலும் பணியாற்ற வேண்டியுள்ளதுடன், மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.