கெசல்கமு ஓயாவில் போற்றி பகுதியில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் நோர்வூட் பொலிஸார் கைது செய்து உள்ளனர்.
இச் சம்பவம் இன்று மதியம் இடம் பெற்று உள்ளது.
காசல்ரி நீர் தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் கெசல்கமு ஓயா வின் கரையோர பகுதியான நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள போற்றி தோட்ட பகுதியில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் நோர்வூட் பொலிஸார் கைது செய்து உள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி க்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற நோர்வூட் பொலிஸார் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.