கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையின் வெளியீடாக அமரசிங்கம் கேதீஸ்வரனின் “மண்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (25) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.
மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் குறித்த வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரி முதல்வர் சவரி பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது.
நூலின் முதல் பிரதியினை மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கிளிநொச்சி மத்திய கல்லூரி முதல்வர் சவரி பூலோகராஜா, நூலாசிரியர் அமரசிங்கம் கேதீஸ்வரன் இணைந்து வெளிவிட்டு வைக்க முதல் பிரதியினை நீர்ப்பாசன பொறியியலாளர் எந்திரி சுதாகரன் பெற்றுக் கொண்டார்.
குறித்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.