மகாராஷ்டிராவில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை (24) சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த பாரிய வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர், மேலும் 7 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் இன்று காலை 10.30 மணியளவில் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கோல்டே தெரிவித்தார்.
மீட்புப் படையினரும், மருத்துவப் பணியாளர்களும் உயிர் பிழைத்தவர்களைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், தீயணைப்புப் படையினர் நிலைமையைக் கட்டுப்படுத்தும் பணியினை முன்னெடுத்திருந்தனர்.
வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநரேம், வெடிவிபத்தில் தொழிற்சாலையில் கூரை இடிந்து விழுந்ததாகவும், அதன் கீழ் குறைந்தது 12 பேர் இருந்ததாகவும் என்பதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி செய்தார்.
வெடி விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.