முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலையில் தைப்பொங்கல் விழா பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
அத்துடன், நேற்று 23.01.2025 வெளியான புலமை பரிசில் பரீட்சைப் போட்டியில் மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலான முதல் இடத்தைப் பெற்றுக் கொண்ட விசுவமடு விஸ்வநாதர் ஆரம்ப வித்தியாலயத்தின் கல்வி பயிலும் விசுவமடு பகுதியைச் சேர்ந்த மாணவன் கிசோதரன் அக்ஷயன் 186 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அவரை இன்றைய தினம் பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பு ஆசிரியர் கௌரவித்துள்ளனர். அத்துடன் 14 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலதிகமாக பெற்றுள்ளனர்.