அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ்ஏஞ்சல்ஸின் வடப்பகுதியில் புதன்கிழமை (23) புதிதாக காட்டுத்தீ பரவியுள்ளது.
காட்டுத் தீ பலத்த காற்றினால் பற்றைக் காடுகளில் 9,400 ஏக்கர் நிலப்பரப்புக்கு (32 சதுர கிமீ) வேகமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் 19,000 க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
லொஸ்ஏஞ்சல்ஸின் பெருநகரப் பகுதியில் ஏற்பட்ட இரண்டு பாரிய காட்டுத்தீகளை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்களை மீண்டும் வடக்கே சுமார் 50 மைல் (80 கிமீ) தொலைவில் உள்ள பாரிய காட்டுத்தீயை அணைக்க வரவழைக்கப்பட்டுள்ளனர்.
லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சூறையாடிய இரண்டு பாரிய காட்டுத்தீகளில் ஒன்றான ஈடன் தீ மண்டலத்தின் அரைவாசி அளவுக்கு புதனன்று ஒரு சில மணிநேரங்களில் காட்டுத் தீ பரவியுள்ளது.
காஸ்டிக் பகுதியில் மொத்த சனத்தொகையில் சுமார் 19,000 பேரை கட்டாயம் வெளியேற்ற வேண்டும் என்கின்ற உத்தரவுகளின் கீழ் இருப்பதாக லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் 16,000 பேர் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சான் கேப்ரியல் மலையில் உள்ள 700,000 ஏக்கர் (2,800-ச.கி.மீ) தேசிய பூங்கா மூடப்பட்டுள்ளது.
வேகமாக பரவும் தீயினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தெற்கு கலிபோர்னியாவைச் சுற்றி சுமார் 1,100 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக வள வள மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.