விக்கியாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (22) வீதியை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார். அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த தயநாதன் விதுசன் (வயது 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் நேற்றையதினம் (22) ஆவரங்கால் சந்தியால் வீதியை கடக்க முற்பட்பட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.
இந்நிலையில் படுகாயமடைந்த அவர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.