வவுனியா மாவட்டத்தில் நிலவும் தொடர் மழை காரணமாக செட்டிகுளம், ஆண்டியாபுளியங்குளம், ராமையன்குளம் பகுதியில் சுமார் 40 ஏக்கர் வயல் காணிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக வவுனியா பாவற்குளம் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நீர் வழிந்தோடும் பகுதியின் கீழுள்ள வயல் நிலங்களே இவ்வாறு பாதிப்படைந்துள்ளன.
மேலும் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
வெள்ள நீர் தொடர்ச்சியாகப் பயிர்களுக்கு மேலாக மூடிப் பாய்ந்து வருவதாகவும், இதனால் தமது விவசாயம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.