கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் இன்று 23.01.2025 தமது வர்த்தக நிலையங்களை மூடியபடி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இதன் போது அவர்கள் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் ஆகிய நாங்கள் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் பல வியாபாரிகள் அவர்கள் எந்தவித அனுமதியும் பொறாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அத்துடன் மெகா சேல்ஸ் என கூறி கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி நகர வர்த்தகர்களின் வியாபாரத்திலும் அவர்களது வாழ்வாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.
எனவே இவரை உடனடியாக இப்பகுதியில் இருந்து மாற்ற வேண்டும் என வர்த்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்களுக்கும் மகஜர் ஒன்றிணையும் கையளித்தனர்.
இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்,
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்று தருவதாக கூறினார்.