நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்களாகியுள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது இருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.