முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா நேற்று புதன்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்துக்காக அரசால் பெறப்பட்ட 61 இலட்சம் ரூபாவைத் தேர்தல் பிரசாரங்களுக்குத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரைத் தவிர, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அவரது மனைவி உட்பட மேலும் 6 பேரைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று வியாழக்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.