வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீடு ஒன்று இன்று(22) அதிகாலை தீப்பிடித்துள்ளது.
அதிகாலை 3.30 மணியளவில் வீடு தீப்பிடிப்பதை கண்ட குடும்பஸ்தர் கடும் முயற்சியின் பின் தீயை அணைத்துள்ளார்.
விசமிகளால் தனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் குடும்பஸ்தர் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்
இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிஸார் தீ பிடித்த வீட்டை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.