ரயில் சேவையில் ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சாதாரண பயணியாக பயணிக்கும் காட்சிகள் இணையத்தில் காணொளியாக வைரலாகி வருகின்றன.
மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு பயணித்துக்கொண்டிருந்தபோது, ரயில் சேவைகளைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து பயணிகளுடன் உரையாடலில் ஈடுபட்டார்.
மேலும், அவர் அமைச்சர் பயணித்த ரயில் 13 நிமிடங்கள் தாமதமாக வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பயணத்தின் போது, அடிக்கடி ரயில் தாமதங்கள், மின் விசிறிகள் பழுதடைதல், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள், நிலையங்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் மற்றும் காலாவதியான, பாதுகாப்பற்ற ரயில்களை தொடர்ந்து பயன்படுத்துதல் போன்ற பிரச்சினைகளை பயணிகள் எழுப்பினர்.