சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வெள்ள நீரை கட்டுப்படுத்த அணைக்கட்டுகளை திறந்தமையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மல்கம்பிட்டி(நெய்னாகாடு) கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலய இடைதங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை இன்று (20) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா நேரடியாக விஜயம் செய்து அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை உடன் நிவர்த்தி செய்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.
இவ் விஜயத்தின் போது சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், வீரமுனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி, கிராம சேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் இடைதங்கல் முகாமில் சுமார் 25ற்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.