காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய மகா கும்பாவிஷேகம் நேற்றையதினம் (19) நடந்தேறியது.
17ம் திகதி கும்பாவிஷேகக் கிரியைகள் ஆரம்பமாகிய நிலையில் 18ஆம் திகதி எண்ணெய்க்காப்பு சாத்துதல் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் நடைபெற்ற பூர்வாங்க கிரியைகளைத் தொடர்ந்து தூபிகளுட்பட பிள்ளையார் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு காலை 9.00 மணி முதல் 11.37 வரையான சுபநேரத்தில் குடமுழுக்கு நிகழப்பெற்றது.
குறிப்பாக நீண்ட காலத்தின் பின் இடம்பெற்ற குடமுழுக்கில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவழிபாடாற்றினர்.