பண்டாரவளை, தர்ம விஜய மாவத்தையின் பழைய வணிக வளாகத்தில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் இன்று (20) அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதன்போது பண்டாரவளை காவல்துறையினர் மற்றும் நகர சபையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தியதுடன், தீ ஏனைய கடைகளுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீ விபத்தினால் சதொச விற்பனை நிலையம் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும், இவ்விபத்தில் ஏற்பட்ட சேதம் இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பண்டாரவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.