மாத்தறை – கந்தர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மாத்தறை, கண்டி வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை – தங்கல்ல பிரதான வீதியில் உள்ள கந்தர தலல்ல பகுதியில் எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்கல்லைக்கும் பயணித்த இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் பலத்த சேதமடைந்துள்ளன.