பருத்தித்துறை துறைமுகம் உட்பட பல்வேறு அபவிருத்தி திட்டங்கள் வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று பிற்பகல் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெறற நாற்பது மீனவர்களுக்கான வலைகளை வழங்கும் நிகழ்வில் கபந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் யாழ் இந்திய துணை தூதுவர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் வடக்கு மாகாண மீனவ பிரதிநிதிகளான அ.அன்னராசா, நா.வர்ணகுலசிங்கம் பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்