காலி சிறைச்சாலையிலிருந்து உடுகம நீதிமன்றத்துக்கு நேற்று வியாழக்கிழமை (16) அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற கைதிகள் இருவரும் உடுகம மற்றும் நாகொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவத்தன்று, கைதிகள் இருவரும் வழக்கு விசாரணைக்காக உடுகம நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர், கைதிகள் இருவரும் வழக்கு விசாரணையை முடித்துவிட்டு காலி சிறைச்சாலைக்கு மீண்டும் செல்வதற்காக சிறைச்சாலை பஸ்ஸில் ஏற முயன்ற போது சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.