வன்னி தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் 35குடும்பங்களுக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக வன்னி ஊடகவியலாளர் ஏற்பாட்டில் லண்டனில் வசிக்கும் நன்கொடையாளரான சுரேன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் ஊஞ்சல்கட்டி, பட்டிகுடியிருப்பு, கற்குளம், கீரிசுட்டான், துவரங்குளம், குமுனமுனை ஆகிய கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட 35குடும்பங்களுக்கு பொங்கல் பானையும் பொருட்களும் சமுர்த்தி உத்தியோகத்தர் தி. சசிகுமார் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.