கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்த இந்திய பிரஜை ஒருவரின் சடலம் இன்று (11) சீதுவ, லியனகேமுல்லவில் உள்ள வீட்டுத் தொகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இந்திய பிரஜை சீதுவை வீட்டு வளாகத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும் 36 வயதுடையவரெனவும் முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.