கல்மடு குளத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகளின் சிலரது வயல்கள் மடிச்சு கட்டி நோய் தாக்கம் காரணமாக முற்று முழுதாக எரிந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக அறுவடை செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாகவும் அத்துடன் தாம் அறுவடை செய்யப் போவதில்லை எனவும் அறுவடை செய்தால் கூட அதற்கான பணத்தை பெற முடியாத நிலையில் வயல் காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
மேலும் தெரிவிக்கையில், கடந்த வருட பெரும்போக செய்கையிலும் இதேபோன்று பெரும் நஷ்டத்தை எதிர் நோக்கியதாகவும் தற்பொழுதும் இந்நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக விவசாயிகள் ஆகிய எமக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இனி வரும் காலங்களில் பலர் நெற்செய்கையில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் தமக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் எனவும் இந்நிலை தொடருமாயின் தேங்காய்க்கு ஏற்பட்ட நிலையே அரிசிக்கும் ஏற்படக் கூடும் என தெரிவித்துள்ளனர்.