கிளிநொச்சியில் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு உலருணவுப் பொதியும், பொங்கல் பொருட்களும் வழங்கி வைப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு உலருணவுப் பொருட்களும் பொங்கல் பொருட்களும் இன்று(10.01.2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
புலம் பெயர் தேசத்தில் வாழும் ஒருவரால் “புறுட்ஸ் கபி” நிறுவனத்தின் ஊடாக குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 250 மாற்றத்திறனாளிகளுக்கு 6000 ரூபா பெறுமதியான குறித்த உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
புறுட்ஸ் கபி நிறுவனத்தினரால் வருடாந்தம் வழங்கப்படும் சமூக நலன்சார் மற்றும் வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் குறித்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளன.