• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தெற்கில் தமிழர்கள் குடியேறிகள் அல்லர்; அவர்கள் பூர்வீகக் குடிகள்.!

Mathavi by Mathavi
January 10, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
தெற்கில் தமிழர்கள் குடியேறிகள் அல்லர்; அவர்கள் பூர்வீகக் குடிகள்.!
Share on FacebookShare on Twitter

“தேசிய மக்கள் சக்தி முதலில் தமது தரப்பினருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல் கொழும்பு, கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். பிற்பட்ட காலத்தில் நீர்கொழும்பு பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றம் பெற்றார்கள். இதுதான் உண்மை.”

  • இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கான நலன்புரித் திட்டங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும். தகுதிவாய்ந்த தரப்பினருக்கு நலன்புரிக் கொடுப்பனவுகள் கிடைக்கப்பதில்லை. கிளிநொச்சி மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது. இதனால் நலன்புரிக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.

ADVERTISEMENT

நலன்புரிக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியற்றவர்களாக உள்ள செல்வந்தர்களுக்குக் கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆகவே, நலன்புரித் திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.

பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்துக்காக மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மலையக மக்களின் வாழ்க்கை என்றும் பாதிக்கப்பட்டதாகக் காணப்படுகின்றது. உலக வரைபடத்தில் இன்றும் லயன் அறைகளில் வாழும் மக்கள் சமூகமாகவே எம் மலையகச் சகோதரர்கள் உள்ளார்கள்.

100 -200 மீற்றர் லயன் அறை தொகுதியில் தார் பூசிய தகரக் கூரைகளினால் அமைக்கப்பட்ட அறைகளில்தான் இன்றும் எம் மலையக மக்கள் உரிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாழ்கின்றார்கள். சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு இந்த மக்களுக்குத் தரமான சொந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தால் இந்த அரசு வரலாற்றில் இடம்பிடிக்கும். இந்த மக்களுக்காக எடுக்கும் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் முறையாக கிடைக்கப் பெறவில்லை. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு 1 முதல் 3 இலட்சம் ரூபா வரையில் மீள்குடியேற்ற தொகை வழங்கப்பட்டது. இருப்பினும் ஒருசிலருக்கு இந்த நிதி கிடைக்கப்பெறவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் 38 ஆயிரம் தமிழர்கள் மீள்குடியமர்த்தப்பட்ட நிலையில் அவர்களில் 11 ஆயிரத்து 790 பேருக்கு மீள்குடியேற்ற தொகை வழங்கப்பட்டது. மிகுதி 26 ஆயிரத்து 209 பேருக்கு இன்றும் அந்தத் தொகை வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு இன்றுவரை இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பப் படிவங்களை நிரப்பியே அதிகளவில் நிதியைச் செலவு செய்துள்ளார்கள். ஆகவே, இந்த அரசு இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக இந்த நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளமை கவனத்துக்குரியது. இந்த அரசுக்குப் பெரும்பான்மைப் பலம் உள்ளது. அனைத்து இன மக்களும் இந்த அரசில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசு விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வுத் திட்டத்தில் அரசு சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில் சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள்.

அரசு சிறந்த முறையில் செயற்பட்டாலும் ஒருசில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்கச் சென்ற பெண் மிகக் கொடூரமான முறையில் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளார். இந்த நாட்டில் என்ன நடக்கின்றது? இந்த விடயம் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் தமக்குக் காணிகள் வேண்டும் என்று பாணந்துறை, கொழும்பு பகுதிகளில் வாழும் சிங்களவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலன்டனில் உள்ள ஒருவர் தன்னைத் தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளர் என்று குறிப்பிட்டுக் கொண்டு புத்தளம், நீர்கொழும்பு, சிலாபம், கொழும்பு, வத்தளை, வெள்ளவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் அந்தப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி முதலில் இந்த நபருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல் கொழும்பு, கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். பிற்பட்ட காலத்தில் நீர்கொழும்புப் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றம் பெற்றார்கள். இதுதான் உண்மை.

1970, 1983 மற்றும் 1985 ஆகிய காலப்பகுதிகளில் அநுராதபுரம் பகுதியில் வாழ்ந்த 22 ஆயிரம் தமிழர்கள் ஒரே இரவில் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதேபோல் 1983 ஆம் ஆண்டு மலையகத்தில் இருந்து 2 ஆயிரம் எம் சகோதரர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இன்று சொந்த இடங்கள் ஏதும் இல்லாமல் பல்வேறு இடங்களில் வாழ்கின்றார்கள். அவர்களையும் மீள்குடியேற்றம் செய்யுங்கள்.” – என்றார்.

Thinakaran
400 702.8K
  • Videos
  • Playlists
  • இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு!
    இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு! 3 days ago
  • உலக சாதனைக்கு தயாரான யாழ் மாணவி! அவசரம் பகிருங்கள், உதவுங்கள்.
    உலக சாதனைக்கு தயாரான யாழ் மாணவி! அவசரம் பகிருங்கள், உதவுங்கள். 5 days ago
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 2 weeks ago
  • 387 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      இந்த நாட்டில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலையே உள்ளது.

      இந்த நாட்டில் தமிழ் இனத்தினை இரண்டாம் தரப் பிரஜைகளாக கணிக்கும் நிலையே உள்ளது.

      by Mathavi
      May 18, 2025
      0

      இந்த நாட்டிலே சிங்கள பெரும்பான்மையுடன் வாழ்வதற்கு நாங்கள் ஆசைப்பட்டாலும் விரும்பினாலும் எங்களை இணைத்து வாழ்வதற்கு விருப்பம் இல்லாமல் தமிழ் இனத்தினை இரண்டாம் தரப் பிரஜைகளாக கணிக்கும் நிலையே...

      நகையைத் தொலைத்தவரை தேடிச் சென்று நகையைக் கையளித்த நகைக்கடை உரிமையாளர்.!

      நகையைத் தொலைத்தவரை தேடிச் சென்று நகையைக் கையளித்த நகைக்கடை உரிமையாளர்.!

      by Mathavi
      May 18, 2025
      0

      யாழ்ப்பாணத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து, அந்த நகையை அவரிடமே கொடுத்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், பேருந்தில்...

      வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் தீவிரம்; கடற்படையும் ஆதரவா?

      வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் தீவிரம்; கடற்படையும் ஆதரவா?

      by Mathavi
      May 18, 2025
      0

      யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. நாளாந்தம் 50 மேற்பட்ட படகுகளில் செல்லும் மீனவர்கள் சட்டவிரோதமாக கடலில் ஒளிவைத்து சிறிய மீன்களுடன்...

      திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

      திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

      by Mathavi
      May 18, 2025
      0

      முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) மாலை 4 மணியளவில் திருகோணமலை காளி அம்மன் கோயில் முன்றலில் திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர்...

      தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

      தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

      by Mathavi
      May 18, 2025
      0

      தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மன்னார் மாவட்ட மகளிர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, இன்றைய தினம்(18.05) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில்...

      சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்.!

      சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்.!

      by Mathavi
      May 18, 2025
      0

      கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளுமென்டல் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில்...

      முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

      முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

      by Mathavi
      May 18, 2025
      0

      முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அந்தவகையில் உரும்பிராயில் அமைக்கப்பட்டுள்ள பொன்.சிவகுமாரனின் திருவுருவச் சிலைக்கு அருகாமையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினராலும்...

      முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்ட ரவிகரன் எம்.பி.!

      முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்ட ரவிகரன் எம்.பி.!

      by Mathavi
      May 18, 2025
      0

      முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 18.05.2025 இன்றையதினம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். இந்த...

      தமிழர்கள் தம்மைத்தாமே ஆழக்கூடிய தீர்வினை எடுப்பதுதான் படு கொ லை செய்யப்பட்டவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி.!

      தமிழர்கள் தம்மைத்தாமே ஆழக்கூடிய தீர்வினை எடுப்பதுதான் படு கொ லை செய்யப்பட்டவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி.!

      by Mathavi
      May 18, 2025
      0

      தமிழர்கள் தம்மைதாமே ஆழக்கூடிய தீர்வினை எடுப்பதுதான் படு கொலை செய்யப்பட்ட மக்களுக்கும், மாவீரர்களுக்கும் நாம் செய்யும் அஞ்சலி. இந்த விடயத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும்...

      Load More
      Next Post
      தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் உயிர் மாய்ப்பு.!

      தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் உயிர் மாய்ப்பு.!

      நீர்க் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

      நீர்க் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

      உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்கும் மக்கள்.!

      உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்கும் மக்கள்.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி