• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இந்த நாட்டில் தமிழ் இனத்தினை இரண்டாம் தரப் பிரஜைகளாக கணிக்கும் நிலையே உள்ளது.

Mathavi by Mathavi
May 18, 2025
in இலங்கை செய்திகள், மட்டக்களப்பு செய்திகள்
0 0
0
இந்த நாட்டில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலையே உள்ளது.
Share on FacebookShare on Twitter

இந்த நாட்டிலே சிங்கள பெரும்பான்மையுடன் வாழ்வதற்கு நாங்கள் ஆசைப்பட்டாலும் விரும்பினாலும் எங்களை இணைத்து வாழ்வதற்கு விருப்பம் இல்லாமல் தமிழ் இனத்தினை இரண்டாம் தரப் பிரஜைகளாக கணிக்கும் நிலையே உள்ளது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

எங்களுக்காக உயிர்நீர்த்த அத்தனை உறவுகளின் ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டுமானால் அரசியல் ரீதியாக என்றாலும் ஏனைய விடயங்கள் என்றாலும் ஒன்றாக பயணித்து எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் பாடுபடவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இனஅழிப்பு வாரத்தின் இறுதி நாளான இன்றைய தினம் மாலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமான நடைபெற்றது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளரும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதான சுடர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரினால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து அனைவரும் ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தியதுடன் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கடலில் மலர் கொண்டு அஞ்சலி செய்யப்பட்டதுடன் விசேட நினைவேந்தல் உரையும் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த கோவிந்தன் கருணாகரம் எம்.பி.,
இலங்கை மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு துயரமான, சோகமான, துக்கரமான நாளாகும். இலங்கை சுதந்திரமடைந்த காலமிருந்து தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளைப் பெறுவதற்காக அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராடி எமது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட தினமே மே 18ஆம் திகதி. முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் கணிப்பீட்டின்படி ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழ் மக்களின் உயிர் காவு கொள்ளப்பட்ட தினமே மே 18ஆம் திகதி.
இலங்கையில் தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் இருந்து இரண்டாம் தர பிரஜைகளாகவே நடத்தப்பட்டு வந்ததன் காரணமாகவே தமது உரிமைகளை பெறுவதற்காக நாங்கள் ஆயிரப் போராட்டத்திற்குள் வலிந்து தள்ளப்பட வேண்டிய ஒரு கட்டாயத்துக்குள் உள்வாங்கப்பட்டோம்.

அந்தவகையில் தான் எமது இனம் தமது உரிமையினை பெறுவதற்காக நீண்ட காலமாக அகிம்சை, ஆயத ரீதியாக போராடிக் கொண்டுவந்தோம். இலங்கையில் மாறி மாறி ஆண்டு வந்த அரசுகள் தமிழ் மக்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தமிழ் மக்கள் தான் இந்த நாட்டின் பூர்வ குடிகள் என்ற எண்ணத்தை மாற்றி இதுவொரு சிங்கள தேசம் இது ஒரு பௌத்த நாடு. பௌத்தர்களுக்குதான் முன்னுரிமை என்ற அடிப்படையிலே மாறி மாறி ஆட்சிசெய்த அரசுகள் எங்களை நடாத்திவந்தார்கள்.

அந்தவகையில்தான் வடகிழக்கில் ஒரு பக்கம் எமது உரிமைகளைப்பெறுவதற்காக போராட்டம் நடைபெற்றுவந்தாலும் தெற்கில் 71ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் 88,89ஆம் காலகட்டங்களில் ஜேவிபி என்னும் ஒரு அரசியல் இயக்கம் ஆட்சியை கவிழ்ப்பதற்காக இரண்டு தடவைகள் போராடியிருந்தார்கள். அவர்கள் போராடிய காலப்பகுதியில் தங்களது 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களையும் தங்களது ஆதரவாளர்களையும் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இன்று இந்த நாட்டில் ஒரு அரசியல்மாற்றம் ஏற்பட்டுள்ளது. அன்று ஆயுத ரீதியான கிளர்ச்சியை ஏற்படுத்தி இந்த நாட்டின் ஆட்சியை பிடிப்பதற்கு போராடிய அந்த ஆயுத இயக்கம் தற்போது இந்த நாட்டின் ஆட்சியை பிடித்துள்ளார்கள். ஜனாதிபதியாகி இருக்கின்றார்கள், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை கையில் வைத்திருக்கின்றார்கள்.

தற்போதைய அரசு தமது தோழர்களையும் ஆதரவாளர்களையும் பட்டலந்த என்னும் வதை முகாமிலே சித்திரவதை செய்து பலபேரை கொன்றொழித்ததாக ஆணைக்குழு ஒன்றின் ஊடாக நாடாளுமன்றத்திலும் அறிக்கையினை சமர்பித்து அதற்கான நடவடிக்கையினை எடுப்பதற்கு முன்நிற்கின்றனர்.

ஆனால் வடகிழக்கில் 30வருடத்திற்கும் மேலாக பல இலட்சம் உயிர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள். அந்த உயிர்களை இந்த நாட்டின் இராணுவம் பலிகொண்டிருக்கின்றது. இறுதியாக முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 40ஆயிரம் உயிர்கள் கொல்லப்பட்டுள்ளது. அதற்கு மேலாக உறவினர்கள் மூலமாக இறுதிக் காலப்பகுதியில் சரணடைந்த போராளிகள், பொதுமக்கள் எங்கு என்று தெரியாமல் அவர்களது உறவினர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்று தனது உறுப்பினர்களை, தங்களது ஆதரவாளர்களை பட்டலந்த வதைமுகாம் மூலமாக கொன்றொழித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கும் இந்த அரசாங்கம், வடகிழக்கில் தமது உரிமைகளை கேட்டு போராடியவர்களுக்கோ படு கொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவோ எந்த நியாயத்தினையும் கொடுக்ககூடிய நிலையில் இல்லை.
தங்கள் அரசாங்கமாக பதவிக்கு வரும்போதும் ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் நாடாளுமன்ற தேர்தல் காலத்திலும் பல வாக்குறுதிகளை வழங்கி வடகிழக்கில் உள்ள மக்களின் வாக்குகளையும் அளியெடுத்துக் கொண்டார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவோம், சிறையில் 30வருடத்திற்கு மேலாக வாழும் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வோம், புதிய அரசியலமைப்பினை கொண்டுவந்து புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வினை காண்போம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று அவையெல்லாம் மறந்துவிட்டு தங்களது கட்சியினருக்கும், உறுப்பினர்களுக்கும் நடந்த அநீதியை மட்டும் தட்டிக்கேட்கும் நிலையே காணப்படுகின்றது.

இதிலிருந்து நாங்கள் உணர்ந்துகொள்வது தமிழ் மக்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையென்பதை அவர்கள் மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றார்கள். அதற்காகத்தான் நாங்கள் தமிழீழமாக எங்களை பிரித்துவிடுங்கள் என்று இந்த நாட்டிலே சிங்கள பெரும்பான்மையுடன் வாழ்வதற்கு நாங்கள் ஆசைப்பட்டாலும் விரும்பினாலும் எங்களை இணைத்து வாழ்வதற்கு விருப்பம் இல்லாமல் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலையே உள்ளது.

தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்றாக ஒற்றுமையாக பயணித்து எங்களுக்காக இவ்வாறு உயிர்நீர்த்த அத்தனை உறவுகளின் ஆத்மாக்களும் சாந்தியடைய வேண்டுமானால் அரசியல் ரீதியாக என்றாலும் ஏனைய விடயங்கள் என்றாலும் ஒன்றாக பயணித்து எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் பாடுபடவேண்டும். எந்த அரசாங்கமாக இருந்தாலும் சிங்கள அரசுகள் தாங்கள் பௌத்த சிங்களவர்கள் என்பதை அவர்கள் எக்காலத்திலும் மறக்கமாட்டார்கள். தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து தமிழர்கள் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டும்.

Related Posts

நல்லூர் பிரதேச சபையின் ஆட்சியை தனதாக்கிய மான்..!

நல்லூர் பிரதேச சபையின் ஆட்சியை தனதாக்கிய மான்..!

by Thamil
June 13, 2025
0

NPP உள்ளிட்ட கட்சிகளின் ஏக விருப்புடன் தமிழ் மக்கள் கூட்டணியின் பத்மநாதன் மயூரன் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரை...

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று நடைபெற்றது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று நடைபெற்றது

by Sangeetha
June 13, 2025
0

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று நடைபெற்றது. 37 உறுப்பினர்களைக்கொண்ட கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 20...

மன்னார் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்

மன்னார் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்

by Sangeetha
June 13, 2025
0

மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளது. முன்னதாக இலங்கை...

புல்மோட்டை, பொன்மலைக்குடா ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம்.!

புல்மோட்டை, பொன்மலைக்குடா ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம்.!

by Mathavi
June 13, 2025
0

புல்மோட்டை -02, பொன்மாலைக்குடாவை சேர்ந்த மூத்த ஆலிம் மௌலவி அல்ஹாஜ் அப்துல்லாஹ் அவர்கள் நேற்று (12) சுகயீனமுற்றிருந்த நிலையில் மரணமடைந்திருந்தார். குறித்த ஜனாஸா இன்று (13) புல்மோட்டை...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து.!

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
June 13, 2025
0

வவுனியா - மன்னார் வீதியில் இரு உந்துருளிகள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா - மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நேற்று...

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலய மட்ட விளையாட்டுப் போட்டி.!

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலய மட்ட விளையாட்டுப் போட்டி.!

by Mathavi
June 13, 2025
0

வவுனியா தெற்கு வலய மட்ட விளையாட்டுப் போட்டியானது சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களப் பாடசாலைகள் உள்ளடங்களாக 102 பாடசாலைகள் பங்கு...

யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.!

யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.!

by Mathavi
June 13, 2025
0

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியன இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை முன்னெடுத்தன. இந்த முகாம்...

வெருகல் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.!

வெருகல் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.!

by Mathavi
June 13, 2025
0

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெருகல் பிரதேச சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதில் கடந்த திங்கட்கிழமை அதாவது...

யாழில் ஆறு ஆடுகளை திருடிய சந்தேகநபர்கள் கைது.!

யாழில் ஆறு ஆடுகளை திருடிய சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
June 13, 2025
0

மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஆறு ஆடுகளை திருடிய இருவர் நேற்றிரவு சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாவகச்சேரி - தச்சன் தோப்பு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி