மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கட்டடமொன்றின் மீது நேற்றிரவு மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
மிதிகம பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.