கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கான 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் அந்த இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறும், 2025ஆம் ஆண்டுக்கான பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்துமாறும் மீண்டும் பதில் பொலிஸ் மா அதிபரால் உத்தரவிடப்பட்டது.
இது இவ்வாறு இருக்கையில் வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு மீண்டும் பதில் பொலிஸ் மா அதிபரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவானது நேற்று நள்ளிரவு பிறப்பிக்கப்பட்டது. அந்தவகையில் பொலிஸார் சிறு சிறு குழுக்களாக இடமாற்றத்தில் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
தென் பகுதியில் வேலை செய்யும் பொலிஸார் வேறு மாவட்டங்கள்/ மாகாணங்களுக்கு சென்று வேலை செய்வதற்கு தயக்கம் காட்டிய நிலையில், இடமாற்றம் குறித்து அவர்கள் செய்த மேன்முறையீட்டுக்கு அமைவாக இந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டது என்றும், அதனால் வேறு மாவட்டங்களல்/ மாகாணங்களில் வேலை செய்யும் பொலிஸார் மீண்டும் தமது சொந்த மாவட்டங்களுக்கு அல்லது அண்மைய மாவட்டங்களுக்கு சென்று வேலை செய்ய முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.