பிறைந்துரைச்சேனை அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் 24வது மாணவர் வெளியேற்று நிகழ்வு அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடை பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் எம்.எஸ். நழீம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது மாணவர்களது நிகழ்ச்சிகளும் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.