தமிழக முன்னாள் முதல்வரும் புரட்சித் தலைவருமான திரு எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றையதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை ஆலடியில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவுத் தூபியில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களால் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் நினைவஞ்சலிக்கு ஏற்பாடுகளை செய்திருந்த வல்வெட்டித்துறை எம்.ஜி.ஆர் நற்பணி னமன்றத்தின் தலைவர் தில்லையம்பலம் ஜெயராஜ்(ராசு) அவர்களின் தலைமையில் சக உறுப்பினர்களும் கலந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.