கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தியும் ஜனாதிபதிக்குரிய மகஜர் கையளிப்பதற்கான கண்டனப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி தற்போது மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.
மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த கண்டனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதில் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் அவர்களிடம் ஜனாதிபதிக்கு கையளிக்குமாறு மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.