தன்னார்வ அமைப்பான விதையனைத்தும் விருட்சமே அமைப்பானது கருகம்பனை பொது அமைப்புகளுடனும் வலி. வடக்கு பிரதேச சபையுடனும் இணைந்து நடாத்தும் மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையானது எதிர்வரும் சனிக்கிழமை 28.12.2024 காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது.
கருகம்பனை கிராமத்தை உள்ளடக்கிய பகுதிகளான நகுலேஸ்வரம் கிராம சேவையாளர் பிரிவு, இளவாலை வடக்கு கிராம சேவையாளர் பிரிவு, இளவாலை வடமேற்கு கிராம சேவையாளர் பிரிவு, வித்தகபுரம் கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்ட உறுப்பினர்கள், கிராமத்தவர்கள், பொது சுகாதார பரிசோதகர், பொலிஸார், வலி. வடக்கு பிரதேச சபை ஊழியர்களுடன் இணைந்து சிரமதானம் செய்யப்படவுள்ளது.
இதனை விட வீடுகளில் இருக்கின்ற நுளம்புகள் பரவக்கூடிய பொருட்களை வீதிகளில் பொதியிட்டு தரம் பிரித்து வைக்கும் நிலையில் அதனை பிரதேச சபை வாகனத்தின் உதவியுடன் அகற்றப்படவுள்ளது. எனவே இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரதும் ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது.